அன்பு நண்பர்களே,
சர்ரே இந்திய தமிழ்ச் சங்கத்தின் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 2018-ம் ஆண்டு மார்ச் திங்கள் அன்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள், சர்ரே சுற்றத்தில் வாழும் தமிழ்க் குடும்பங்களை ஒருங்கிணைக்கவும், குழந்தைகள் தாய்மொழியை கற்பிப்பத்தோடு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் நல்லிணக்கத்தை உணர்த்தும் ஒரு மையமாக அமைய வேண்டும் என்பதேயாகும்.
நேர்மையான நோக்கமும், ஆற்றலான நல் உள்ளங்களும் இணைந்து ஒரு புதிய முயற்சியில் இணைந்துள்ளோம். அதற்கினங்க, முதற்கட்ட முயற்சியாக, SITA தமிழ் கல்விக் கூடத்தை Worchester park (Royal Borough of Kingston Upon Thames) பகுதியில் நிறுவியுள்ளோம்.
ஒரு எளிமையான ஆரம்பமாயினும், வரும் ஆண்டுகளில் எங்கள் முயற்சிகள் பல நற்கிரியைகளை திருவினையாக்கும் என உறுதியுடன் வழிமொழிகிறோம்.
மேலும், இந்த இணையதளம் வாயிலாக எங்களின் மற்ற நிகழ்ச்சி நிரல்களை தொடர்ந்து அறிந்துகொள்ளவும். இந்த அற்புதமான பயணத்தில் நீங்களும் இணைய இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.
வணக்கம்,
சர்ரே இந்திய தமிழ்ச் சங்கம்.